கடலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர் கைது
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: June 30, 2020, 11:58 AM IST
வெள்ளகேட் பகுதியில் செயல்பட்டும் வரும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்திற்கு நேற்று முன் தினம் அதிகாலையில் வந்த இளைஞர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர்.
லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவானது. இதனடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் எய்தனூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைதுசெய்தனர்.
Also read... மதுபானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய அனுமதி
இவர் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஏடிஎம் கொள்ளை முயற்சியில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்