• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர் கைது!

உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர் கைது!

கொலையான மனைவி மற்றும் கொலை செய்த கணவர்

கொலையான மனைவி மற்றும் கொலை செய்த கணவர்

பணிக்கு செல்லும் திவ்யாவுக்கு, விஷம் கலந்த உப்புமாவை பெல்லார்மின் கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட திவ்யா மீதி உப்புமாவை நாய்க்கு வைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருமணமான ஐந்தே மாதங்களில் உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளியோடைச் சேர்ந்த பேராசிரியர் பெல்லார்மினுக்கு, பேராசிரியை திவ்யா என்பவருடன் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறி திவ்யாவை, பெல்லார்மின் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணிக்கு செல்லும் திவ்யாவுக்கு, விஷம் கலந்த உப்புமாவை பெல்லார்மின் கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட திவ்யா மீதி உப்புமாவை நாய்க்கு வைத்துள்ளார்.

    பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியை திவ்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால், அருகில் இருந்தவர்கள் 108 ஆம்பூலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்ஸில் செல்லும் நேரத்தில், குடும்ப பிரச்சனைகளை கூறிய திவ்யா, கணவன் விஷம் வைத்திருக்கலாம் என வாக்குமூலமாக கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் திவ்யா உயிரிழந்தார். அவர் வளர்த்த நாயும் வீட்டில் உயிரிழந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் திவ்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் விஷம் வாங்கியதை பேராசியர் பெல்லார்மின் ஒப்புக்கொண்டார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: