முடிவெட்டவில்லை என்று மாணவரை அடித்த பள்ளி முதல்வர் கைது!

அன்பரசன் பள்ளிக்குச் சென்றபோது, முடிவெட்டிவரவில்லை எனக் கூறி பள்ளி முதல்வர் சரவணன், கடுமையாக தாக்கியுள்ளார்.

முடிவெட்டவில்லை என்று மாணவரை அடித்த பள்ளி முதல்வர் கைது!
காயமடைந்த மாணவர் சரவணன்
  • News18
  • Last Updated: October 16, 2019, 5:23 PM IST
  • Share this:
சென்னையை அடுத்த ஆவடியில் 10-ம் வகுப்பு மாணவரை கொடூரமாக தாக்கிய தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடியில் உள்ள கலைமகள் பள்ளியில், சேர்க்காடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரின் மகன் மனோ 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று அவர் பள்ளிக்குச் சென்றபோது, முடி வெட்டிவரவில்லை எனக் கூறி பள்ளி முதல்வர் சரவணன் கடுமையாக தாக்கியுள்ளார்.


இதனால், உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த மனோ, பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, பள்ளிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர், கலைமகள் பள்ளி முதல்வர் மீது காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பள்ளி முதல்வர் சரவணனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவ, மாணவிகளை கொடுமைப்படுத்தும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

Also see...
First published: October 16, 2019, 5:23 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading