ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதலித்ததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தை.. ஆபத்தான நிலையில் மகளுக்கு சிகிச்சை..

காதலித்ததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தை.. ஆபத்தான நிலையில் மகளுக்கு சிகிச்சை..

கைது செய்யப்பட்ட அய்யப்பன்

கைது செய்யப்பட்ட அய்யப்பன்

Thiruvarur District: சேந்தமங்கலம் அருகே எதிர்ப்பை மீறி காதலித்த மகளை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திருவாரூர் அருகே காதலித்ததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

  சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் - துர்கா தம்பதியின் மகள் கிருஷ்ணகுமாரி. இவர், கேக்கரை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த அய்யப்பன், கிருஷ்ணகுமாரியை பல முறை கண்டித்துள்ளார்.

  இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரி தனது வீட்டு வாசலில் நின்றபடி ஜெகனுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த அய்யப்பன், இருவரையும் கடுமையாக திட்டியுள்ளார். தொடர்ந்து, நைலான் கயிற்றை எடுத்து வந்து, கிருஷ்ணகுமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

  அப்போது, கிருஷ்ணகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  Also read... கல்லூரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.. எழுதி வைத்த உருக்கமான கடிதம்..

  உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகுமாரியின் தாய் துர்கா, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  அதன்படி, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அய்யப்பனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  -செய்தியாளர்: செந்தில் குமரன்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Crime News, Love, Thiruvarur