குடிபோதையில் 2 பெண் குழந்தைகளை அடித்துக் கொன்ற தந்தை.. காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
குடிபோதையில் 2 பெண் குழந்தைகளை அடித்துக் கொன்ற தந்தை.. காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெண் குழந்தைகளை கொன்ற நபர்
காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குடிபோதையில் இரு பெண் குழந்தைகளை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் இரண்டாவது மகள் 14 வயது சிறுமி நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில் எப்போது இருக்கும் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார், நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தீபா இருவரும் வீட்டில் இருந்து இருக்கிறார்கள்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வழக்கம்போல் மது குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மது போதையில் இருந்த கோவிந்தராஜ் கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கி அடித்து கொலை செய்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் கோவிந்தராஜை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். மது போதையில் தனது இரு மகள்களையும் அடித்துக்கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமிகளின் தாயார் வேலைக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
-செய்தியாளர்: சந்திரசேகர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.