பாலியல் அத்துமீறலால் மனமுடைந்த பெண் தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி: ஓட்டுநர் கைது

பாலியல் அத்துமீறலால் மனமுடைந்த பெண் தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி: ஓட்டுநர் கைது
கோப்புப் படம்
  • Share this:
கோவை இருகூரில் பெண் தூய்மைப்பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேரூராட்சி வாகன ஓட்டுநரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருகூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் பெண்ணிடம் பணியின்போது, பேரூராட்சியில் ஓட்டுநராக பணியாற்றும் ராஜதுரை என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், தூய்மைப்பணியாளரை கையைப் பிடித்து மீண்டும் இழுத்து ராஜதுரை அத்துமீறியதாக கூறப்படுகிறது.




இதனால், மனமுடைந்த பெண், தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், ராஜதுரையை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading