பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 23 கோடி ரூபாய் மோசடி... சேலத்தில் கணவன், மனைவி கைது

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 23 கோடி ரூபாய் மோசடி... சேலத்தில் கணவன், மனைவி கைது
  • News18
  • Last Updated: October 20, 2019, 8:59 AM IST
  • Share this:
சேலத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 23 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆசையை தூண்டி மற்றுமொரு மோசடி நடந்துள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், இந்துமதி தம்பதி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலகம் ஒன்றை நடத்திவந்தனர். இந்த தம்பதி தங்களது நண்பர்கள், உறவினர்களை இடைத்தரகர்களாக நியமித்து, ஏற்றுமதி வர்த்தக உரிமம் பெற்றுத்தருவதாகவும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இவர்களது விளம்பரத்தை நம்பி அலுவலகத்திற்கு வரும் முதலீட்டாளர்களிடம் ஆசையை தூண்டும் வகையில் கண்ணில் படும் வகையில் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைத்திருக்கின்றனர். இவர்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவார்கள் என நம்பி ஓராண்டில் 350-க்கும் மேற்பட்டோர் சுமார் 23 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.


பணத்தை பறிகொடுத்த சிலர் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாநகர போலீசார், மணிகண்டன், இந்துமதி தம்பதியை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 சொகுசு கார்கள், 10 சவரன் நகைகள், 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் ஏமாந்த பலரும் , மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். பொதுமக்களிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தில், அந்த தம்பதி துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக முதலீட்டாளர்களை அழைத்து வந்த இடைத்தரகர்களையும், அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில், மணிகண்டன், இந்துமதி தம்பதிக்கு உதவியாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.Also watch

First published: October 20, 2019, 8:57 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading