மதுரை விஸ்வநாதபுரதத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், "தணிக்கை அலுவலகம் நடத்தி வரும் என்னிடம் மதுரையை சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் மகன் மிதுனுடன் சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும், திமுகவில் மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருவதாகவும், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதாக கூறினார்.
இதனால் அரசுத்துறையில் என் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியதை அடுத்து சிறிது சிறிதாக 47,26,000 ரூபாயை என்னிடம் வாங்கினார். ஆனால் அரசு வேலை வாங்கி தராததால் பணத்தை திரும்பி தரும்படி கேட்டேன். ஆனால் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேனுகாவும் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தார்" என புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஸ்ரீ புகழ் இந்திரா வேறு யாரிடமும் இதுபோன்ற மோசடி செய்து உள்ளாரா என காவல்துறை விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.