கடலூர் கொலை - ஊராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 14 பேர் கைது

கைது செய்யப்பட்ட 14 பேர்

  • Share this:
கடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பியை கொன்ற வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் அருகே உள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில் மாசிலாமணி என்பவருக்கும் மதியழகன் என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் மதியழகன் மனைவி சாந்தி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற அந்த நாளிலே தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கள் ஊரில் எனக்கு பாதுகாப்பு இருக்காது எனவே பாதுகாப்பு அளிக்க கோரி புகார் கொடுத்திருந்தார் மதியழகன். அதிலிருந்து தாழங்குடா கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் அடிக்கடி நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்னதாக மாசிலாமணி தரப்பினருக்கும் மதியழகன் தரப்பினருக்கும் கிராமத்தில் கிருமி நாசினி தெளிப்பதில்  மோதல் ஏற்பட்டது. இதில் மாசிலாமணி தரப்பினர் மதியழகனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மதியழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சில நாட்களுக்கு முன்னதாக கிராமத்திற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னை தாக்கிய அவர்களை எப்படியாவது தாக்கி விட வேண்டும் என்று சதித் திட்டம் போட்டதாக தெரிகிறது.

கடந்த ஒன்றாம் தேதி இரவு மாசிலாமணியின் தம்பியான மதிவாணன் என்பவர் கடலூரிலிருந்து கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது தாழங்குடா எல்லைப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையை கண்டித்து மாசிலாமணி தரப்பினர் கிராமத்தில் உள்ள மதியழகன் ஆதரவாளர்களின் வீடுகளை சூறையாடி தீ வைத்தனர். மேலும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 படங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் கலவரம் மூண்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட எஸ்பி அபினவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கொண்டு சென்று கலவரத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அணைத்தனர் பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் உடலை பிரேத பரிசோதனை செய்து பலத்தைப் போலீசார் பாதுகாப்போடு உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் மூன்று நாட்களாக தாழங்குடா கிராமம் முழுவதும் போலீசாரின் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல தடை விதித்து ஊர் எல்லையில் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். வெளியிலிருந்து கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Also read... கேரள தங்கம் கடத்தல் வழக்கு... ஐக்கிய அரபு அமீரகம் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு!

இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க கடலூர் டிஎஸ்பி சாந்தி உட்பட 6 தனிப்படை அமைக்கப்பட்டது இதுவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் மதியழகன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மேலும் மாசிலாமணி தரப்பினர் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்டதால் படகுகளுக்கு தீ வைத்ததால் இதுவரை 38 நபர்களை காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளனர்.

மேலும் தாழங்குடா மீனவ கிராமத்தில் மீண்டும் கலவரம் ஏற்படாத வண்ணம் கடலூர் எஸ்பி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இரவு பகல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Published by:Vinothini Aandisamy
First published: