மதுபோதையில் திருட்டு: ஒத்தச் செருப்பை வைத்து திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை

சென்னையில் பூட்டிய வீட்டில் மது போதையில் திருடிய திருடர்களை போலீஸ் கண்டுபிடிக்க ஒற்றைக்கால் செருப்பு உதவியுள்ளது.

மதுபோதையில் திருட்டு: ஒத்தச் செருப்பை வைத்து திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை
கோப்புப்படம்
  • Share this:
சென்னை சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் சௌந்தரராஜன் என்பவர் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆரணிக்கு சென்றுவிட்டார். செப்டம்பர் 1ம் தேதி, அவரின் வீட்டில் இருந்த டிவி, நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசில் சவுந்தரராஜன் புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டில் புதிதாக விஷ்ணு என எழுதியிருந்ததாகவும், ஒற்றை செருப்பு மட்டும் கிடந்ததாகவும் சவுந்தரராஜன் போலீசில் கூறினார். இந்நிலையில் செம்மஞ்சேரியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சோழிங்கநல்லூரைச் சேர்ந்த மதன் என்பவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் வீட்டில் சென்று விசாரித்தனர், அங்கு ஒற்றைக்கால் செருப்பு மட்டும் இருந்துள்ளது. மேலும் மது குடிக்க பணம் இல்லாததால் மதன் தனது நண்பர் ராகுலுடன் சேர்ந்து சௌந்தரராஜனின் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.


மது போதையில் ஒரு செருப்பை சவுந்தரராஜன் வீட்டில் விட்டுவிட்டு ஒற்றை செருப்புடன் இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். போதையில் தனது மகன் விஷ்ணுவின் பெயரையும் மதன் எழுதியது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மதன் அளித்த தகவலின் பேரில் அவருடன் திருடிய ராகுலும் போலீசில் சிக்கினார்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading