• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...!

ட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சேலம் மாவட்டத்தில் மலை கிராமங்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தை ட்ரோன் மூலம் கண்டறிந்து போலீசார் அழித்தனர்.

    ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கி உள்ளது. இதை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலத்தில் மலை கிராமங்களில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்த்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  ஆனால் மலை கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருப்பதால் ரெய்டு செல்வதை அறிந்து வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கள்ளச்சாராயத்தை மாற்றிவிடுவதால் போலீசாரால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியவில்லை.

    இதனால் ட்ரோன் மூலமாக மலை கிராமத்தை கண்காணித்து கள்ளச்சாராயத்தை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, அருநூத்து மலை கிராமங்களில் ட்ரோன் கேமராக்களை கொண்டு போலீசார் கண்காணித்தனர்.

    அங்கு வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் ஊரல், 25 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 5 டியூப்களில் அடைத்து வைக்கப்பட்ட கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த நான்கு நாட்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 165 வழக்குகள் பதிவு செய்த போலீசார் 60 பேரை கைது செய்தனர்.

    இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ரெய்டில் 21 ஆயிரத்து 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஆயிரத்து 720 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 பேரை கைது செய்துள்ளனர்.






    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: