தி.மு.க பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 9 இடங்களில் வழக்குப் பதிவு

தி.மு.க பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 9 இடங்களில் வழக்குப் பதிவு

தி.மு.க மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

தி.மு.க பொதுக்கூட்டத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் 6 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 • Share this:
  தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சி மாவட்ட சிறுகனூரில் தி.மு.கவின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

  இந்த பொதுக்கூட்டத்துக்காக, திருச்சி - சென்னை 4 வழிச்சாலையில் சுமார் 40 கி.மீ தூரம் இருபுறமும் தி.மு.க கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருச்சி மாவட்டம் சிறுகனூர், சமயபுரம், கொள்ளிடம் காவல் நிலையங்களிலும் மாநகரில் விமான நிலையம், கே.கே.நகர், கண்டோன்மென்ட் காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கூடியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புறநகரில் 3 வழக்குகளும், மொத்தம் 9 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: