Home /News /tamil-nadu /

விடவே.. விடாதீங்க.. பப்ஜி மதனுக்கு “நோ ஜாமின்” - உயர் நீதிமன்றத்தில் கறார் காட்டிய போலீஸ்

விடவே.. விடாதீங்க.. பப்ஜி மதனுக்கு “நோ ஜாமின்” - உயர் நீதிமன்றத்தில் கறார் காட்டிய போலீஸ்

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

மதன் ஜாமின் மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜாமின் கொடுக்க கூடாது. அவரை வெளியே விட்டால் இளைஞர்களுக்கும் சிறார்களுக்கும் ஆபத்து என்று போலீசார் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி, ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவந்தவர் மதன்குமார் மாணிக்கம்.

    மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக, ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார்.

    கேஜிஎப் படத்தின் தீம் மியூசிக் போட்டுக்கொண்டு யூடியூப்பின் டானாக நினைத்து கொண்டு சோலோ கிங் என்று பில்டப் கொடுத்துவந்தார்.

    பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி விளையாடும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இவரது பேச்சு மற்றும் பில்டப்பிற்கு அடிமையாகினர். தனது ரசிகர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க யூடியூப் வருமானமும் மதனுக்கு அதிகரித்துள்ளது.

    தன்னை நம்பிய சிறார்கள் மற்றும் இளைஞர்களிடம் யூடியூப் நேரலையில் தான் ஏழைகளுக்கு உதவுவதாக அவிழ்த்து விடுவார் மதன். இதை நம்பிய கூட்டம் மதன் யூடிப்பக்கத்தில் வெளியிடும் வங்கி கணக்கிற்கு பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

    ஒரு மணி நேர நேரலையில் பல லட்சங்களை சிறார்களிடம் இருந்து ஏமாற்றி சம்பாதித்த மதன், அந்த பணத்தில் உல்லாச ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

    எல்லை மீறிய மதன்குமார் மாணிக்கத்தின் ஆபாச பேச்சுகள் மற்றும் மோசடி தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்தன. அத்துடன் மதனின் அடாவடி பேச்சு தொடர்பாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒளிபரப்பியது.

    சாட்டையை வீச தொடங்கிய போலீசார் அதிரடியாக செயல்பட்டு மதனின் மனைவி கீர்த்திகா மற்றும் தலைமறைவாக இருந்த மதனையும் கைது செய்தனர்.

    மதனின் வங்கி கணக்கில் இருந்து ரூ 4 கோடி வரை பறிமுதல் செய்த போலீசார் அவருது ஆடம்பர சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் குண்டாஸ் சட்டத்திலும் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த பதினொரு மாதங்களாக சிறையில் உள்ளார் மதன்.

    தன் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் அது மதனுக்கு சாதகமாகி இரண்டு வாரத்திற்கு முன்பு நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் ஜாமின் கிடைக்காமல் மதன் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்நிலையில் மதன் ஜாமின் மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள் - 4 மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம் வழக்குகள்!

    சைபர் குற்றவாளியான பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், மேலும் பல ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வார் என்றும் சிறுவர்களிடம் இருந்து ரூ 2.89 கோடி மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் போலீசார்.

    அவரை வெளியில் விட்டால் தனக்கு எதிரான ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மதன் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YouTuber Madan

    அடுத்த செய்தி