காவல்துறையினர் பொதுமக்களிடம் தகாத வார்தைகளில் பேசக்கூடாது - ஏ.டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உத்தரவு

காவல்துறையினர் பொதுமக்களிடம் தகாத வார்தைகளில் பேசக்கூடாது - ஏ.டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உத்தரவு

கோப்புப் படம்

பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் பேசுவதை போலீசார் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஸ்தாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சிறப்பு ஆய்வாளர் பாலு கொலையான சம்பவத்தில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையினருக்கு சிறப்பு காவல்துறை இயக்குனர் ராஜேஷ்தாஸ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

  அதில் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்காணிப்பாளரால் நேரடியாக நியமிக்கப்பட்டு இயங்கும் குற்றவியல் குழுக்கள், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  மதுபோதையில் இருக்கும் நபர்களை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், குறிப்பாக போதையில் உள்ள சந்தேக நபர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது என்றும் ராஜேஷ்தாஸ் அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை, மனுதாரர்கள் யாரையும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  ரோந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதை தவிர்க்க வேண்டுமென்றும், விபத்துப் பகுதி, விபத்தின்போது பழுதான வாகனங்கள் பற்றிய அறிவிப்பு பலகைகளை வைத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அறிவிப்பு தர வேண்டும் என்றும் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: