Home /News /tamil-nadu /

சீன அதிபர் வருகைக்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாஸ்டர் பிளானை வெளியிட்ட காவல்துறை

சீன அதிபர் வருகைக்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாஸ்டர் பிளானை வெளியிட்ட காவல்துறை

சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்பிங்

  • News18
  • Last Updated :
    சீன அதிபர் வருகைக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைக் காவல்துறை இணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “சீன அதிபருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு மாதத்துக்கு முன்பே செய்து வந்தோம். 110 எஸ்ஐ தலைமையில் தனிப்படை அமைத்தோம். 15 நாட்கள் ஓ.எம்.ஆர் சாலையில் பல்வேறு தகவல்களை சேகரித்தோம். பஸ், ரயில் முன்பதிவில் முரணாக ஏதும் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தோம்.

    கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டோம். சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்கள், மின்சார ரயில் வழித்தடங்களையும் கண்காணித்து வந்தோம்.

    சென்னை மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தனர். சீன அதிபர் தங்கும் ஓட்டல் 48 மணி நேரத்துக்கு முன்பே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    35 கிலோமீட்டர் தூரத்திற்கு வெளிநாட்டு அதிபர் பயணிப்பது இதற்கு முன்னர் நடந்ததில்லை. 110 உதவி ஆய்வாளர்கள் உட்பட 200 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது.

    சீன அதிபருக்கு என்னென்ன மாதிரியான எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் இருக்கும் என்பதை பல்வேறு நாடுகளுக்கு அவர் சென்றபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டன.

    3 பிரிவு சீன அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவர்கள் தமிழக போலீசாரின் பணிகளில் தலையிடவில்லை. அவர்களின் தேவைகளை மட்டுமே எடுத்துரைத்தனர். எதிர்பார்த்ததைவிட தமிழக காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.

    வீடியோ பார்க்க: வேலூர் கோட்டை அழகுபடுத்தும் பணி!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Mamallapuram Summit

    அடுத்த செய்தி