ரூ.50,000-த்தை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு விழா!

news18
Updated: July 12, 2018, 8:52 AM IST
ரூ.50,000-த்தை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு விழா!
சிறுவன் யாசின் போலீசுடன்
news18
Updated: July 12, 2018, 8:52 AM IST
ஈரோட்டியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதி. இவரின் மகன் யாசின் அருகே உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளான்.

அதனை திறந்து பார்த்த போது அதில் நிறைய பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். அந்த பையை எடுத்து சென்ற யாசின் இதுதொடர்பாக தனது ஆசிரியரிடம் கூறியுள்ளான். அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை போலீசாரிடம் யாசினை வைத்து கொண்டு ஒப்படைத்தார்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார். யாசினின் குடும்பம் வறுமையில் வாடினாலும், நேர்மையாக செயல்பட்ட சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.

பள்ளி சீருடை கூட கிழிந்த நிலையில் இருந்தும், ரூ.50,000த்தை ஒப்படைத்த யாசினுக்கு சீருடைகளை வாங்கி தருவதாக மாவட்ட எஸ்.பி. உறுதியளித்தார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...