போலீஸ் காவலில் நடந்த வதை மரணங்கள்: இழப்பீட்டை இழுத்தடிக்கும் தமிழக அரசு..

போலீஸ் காவலில் நடந்த வதை மரணங்களில் இழப்பீடு எவ்வாறு கணக்கிட வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கிய முன் மாதிரியான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

போலீஸ் காவலில் நடந்த வதை மரணங்கள்: இழப்பீட்டை இழுத்தடிக்கும் தமிழக அரசு..
கோப்புப் படம்
  • Share this:
2015-ஆம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்த சுப்ரமணியன் வண்ணப்பூச்சுத் தொழிலாளர். அவரது பக்கத்துவீட்டில் ஏற்பட்ட கொலை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் கட்டுப்பாட்டில் 8 நாட்கள் விசாரிக்கப்படும்போது வதைக்கு ஆளான அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவர் மனைவி ரேவதி 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சுப்பிரமணியன் உடலை வாங்க மறுத்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி கொடுத்து போராட்டம் பின்வாங்கப்பட்டது.

ஐந்து வருடம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், போலீஸ் காவலில் சித்திரவதை மரணம் நடந்திருப்பது தொடர்பான குற்ற வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் , காவல் அதிகாரிகள் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு, இழப்பீடு வழங்க நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டார்.

படிக்க... நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி - போலீசில் மேலாளர் புகார்

”பொதுவாக காவல் நிலைய மரணங்களுக்கு இழப்பீடு என்பது 2 லட்சம், 5 லட்சம் என்ற அளவில்தான் இருக்கும். ஆனால் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு 2019-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இறந்த நபர் உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு பணம் குடும்பத்துக்காக ஈட்டியிருப்பாரோ அந்த தொகையை கணக்கிட்டு 30,00,000 அவரது அன்பையும் அரவணைப்பையும் இழந்து வாடுவதற்கு 40,000 மற்றும் அதற்கான 6 சதவீத வட்டியுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று கூறியது. இது ஒரு முன்மாதிரி தீர்ப்பாகும்" என்று தெரிவிக்கிறார் காவல் நீதி மற்றும் சித்ரவதை ஒழிப்பு பிரச்சாரம் இணை அமைப்பாளார் வழக்கறிஞர் விஜய் சங்கர்.இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.தமிழக அரசின் மேல் முறையீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"கடந்த ஆண்டு தீர்ப்பு வந்தவுடன் சற்று ஆறுதல் அடைந்தேன். ஆனால் இப்போது வேதனையாக இருக்கிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்வதே பெரும்பாடாக உள்ளது " என்கிறார் ரேவதி.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading