டெலிவரி செய்த பொருட்களுக்கு பணம் தராமல் அமேசான் ஊழியரை தாக்கிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோப்புப் படம்

சென்னையில் டெலிவரி செய்த பொருட்களுக்கு பணம் தராமல் அமேசான் ஊழியரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  சென்னை செனாய் நகர் வெங்கடாசலபதி தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் அமேசானில் டெலிவரி ஊழியராக பணிப்புரிந்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று வீரபத்திரன் கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரக்கூடிய நித்தீஷ் பந்தாரி என்பவர் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.

  டெலிவரி செய்த பொருட்களை நித்தீஷ் பந்தாரி பெற்று கொண்டு அதற்குண்டான 1046 ரூபாய் பணத்தை தராமல் ஊழியரான வீரபத்திரனிடம் தகராறில் ஈடுபட்டு முகத்தில் தாக்கியுள்ளார். காயமடைந்த வீரபத்திரன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

  மேலும் படிக்க...ஒரே நேரத்தில் முகம், கை மாற்று அறுவை சிகிச்சை செய்த 140 மருத்துவர்கள்

  மேலும் தன்னை தாக்கியதாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் நித்தீஷ் பந்தாரி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: