ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக, இந்துத்துவா ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம்

பாஜக, இந்துத்துவா ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம்

காவலர் பணியிடை நீக்கம்

காவலர் பணியிடை நீக்கம்

சுரேஷ் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா பற்றி வரும் செய்திகளை சேகரிந்து அதனை தனது  ஃபேஸ்புக்  மூலம் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் குமாரை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திண்டுக்கல்லில் கட்சி சார்பாக செயல்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து  காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  அரசுப் பணியில் உள்ளவர்கள் எந்த கட்சிக்கும் எந்த மதத்துக்கும் ஆதரவாக இல்லாமல், நடுநிலையாக செயல்படவேண்டும் என்பது விதி.  இதனை மீறி அரசியல் கட்சிகளுக்கோ, மதம் சார்ந்தோ, ஜாதி சார்ந்தோ செயல்படும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கலில் அவ்வாறு ஒரு சார்பாக செயல்பட்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்  சுரேஷ். இவர்  சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா  பற்றி வரும் செய்திகளை சேகரிந்து அதனை தனது  ஃபேஸ்புக்  மூலம் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் பேஸ்புக் கணக்குகளை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்த பொழுது தொடர்ந்து அவர் ஒரு சார்பாக  பதிவு செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

  இதையும் படிக்க: கேரள லாட்டரியில் விழுந்த ரூ.10 கோடி பரிசு: உறவினரை அழைத்துவர சென்ற தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்

  இதனையடுத்து சுரேஷ் குமாரை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  அவரது பேஸ்புக் பின்பற்றி வந்த பொதுமக்கள் ஏழு நபர்களை ரூரல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து  விசாரணை நடத்தப்பட்டது.

  செய்தியாளர்: சங்கர் - திண்டுக்கல்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Police, Police suspended, Political party