• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா பாதிப்பால் காவலர் உயிரிழப்பு - சென்னை காவல்துறையில் மூன்றாவது மரணம்

கொரோனா பாதிப்பால் காவலர் உயிரிழப்பு - சென்னை காவல்துறையில் மூன்றாவது மரணம்

காவலர் நாகராஜன்

காவலர் நாகராஜன்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • Share this:
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் நாகராஜன் (32). இவர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி  வந்தார். சென்னை பாரிமுனையில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி  மாநகராட்சி அலுவலகத்தில் நாகராஜன் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

Also read... அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50% பணியாளர்கள் இருக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி...!

ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மூன்றாவது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு என்பது இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: