காலையில் பிரசவம்: மாலையில் திருமணம்! போலீசார் துரித நடவடிக்கை

காலையில் பிரசவம்: மாலையில் திருமணம்! போலீசார் துரித நடவடிக்கை
கோகிலா மற்றும் பரமசிவம்
  • News18
  • Last Updated: February 3, 2020, 5:58 PM IST
  • Share this:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய நபருக்கு அப்பெண்ணுடன் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக திண்டிவனம் அரசு மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு புகார் அளித்தது.

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் திண்டிவனம் மகளிர் காவல்நிலையம் அருகே உள்ள கோயிலில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்