முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உள்பட 500 பேர் மீது விழுப்புரம் மாவட்டம் ரோசனை காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கருவாடு மீன் ஆகலாம் ஆனால் சசிக்கலா ஒருபோது அதிமுகவின் உறுப்பினர் ஆக முடியாது உள்ளிட்ட சசிக்கலா குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 9ஆம் தேதி ரோசனை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்த சிவி.சண்முகம் சசிக்கலாவின் தூண்டுதலின் பேரில் என்னையும், என் குடும்பத்தையும் தொலைத்துவிடுவதாக 500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக்கூறி, சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
சிவி.சண்முகத்தின் புகாரின் அடிப்படையில் இன்று ரோசனை காவல்துறையினர் சசிக்கலா உள்பட அடையாளம் தெரியாத 500 நபர்கள் மீது 501(1),507, 109,67 IT என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... Petrol Diesel Prices | சென்னையில் சதத்தை நெருங்கிய பெட்ரோல் விலை... இன்றைய நிலவரம் என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்தின் புகாரின் பேரில் சசிக்கலா மீது வழக்கு பதியப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த வி.கே.சசிகலா, தற்போது தமது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CV Shanmugam, Sasikala