முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசி பேஸ்புக்கில் நேரலை - இளைஞரை கைது செய்த காவல்துறை

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசி பேஸ்புக்கில் நேரலை - இளைஞரை கைது செய்த காவல்துறை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

விமான நிலைய போலீசாரின் விசாரணையில் அவர் சிங்கப்பூரில் கட்டிடத் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட்டு அதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞரை, அதிகாரிகள் கைது செய்தனர்.

சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார். தொடர்ந்து மதுரை விமான நிலைய ஓடுதளத்தில் பேருந்தில் சென்றபோது அவருடன் பயணித்த ராஜேஷ் என்பவர் தன்னுடன் எடப்பாடி பழனிசாமி பயணித்ததை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். தொடர்ந்து, அவரை அவதூறாகப் பேசி, அவருக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் ராஜேஷ் செல்போனை பறித்து, அவரை விமான நிலைய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தார். விமான நிலைய போலீசாரின் விசாரணையில் அவர் சிங்கப்பூரில் கட்டிடத் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami