ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைனில் பட்டம், மாஞ்சா நூல் விற்பனை செய்த நபரை வாடிக்கையாளர் போல பேசி வரவழைத்த காவல்துறையினர்!

ஆன்லைனில் பட்டம், மாஞ்சா நூல் விற்பனை செய்த நபரை வாடிக்கையாளர் போல பேசி வரவழைத்த காவல்துறையினர்!

பட்டங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

பட்டங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

காத்தாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஷேக் என்பவரை கொரட்டூர் பகுதிக்கு வாடிக்கையாளர் போல் வரவழைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆன்லைனில் பட்டம் விற்பனை செய்த நபரை  பெரம்பூரில் இருந்து கொரட்டுர் வரவழைத்து  கொரட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

  சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடி வடக்கு மாட வீதியில் சில இளைஞர்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் நேற்று   மாலை நேரத்தில் மாஞ்சா நூல் பயன்படுத்திய காற்றாடிகளை விடுவதாக புகார்கள் வந்தன.

  புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் திருமணநிதி, உதவி ஆய்வாளர் சந்தோஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சில நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து, எச்சரித்து காவல் நிலையை ஜாமினில் அனுப்பி வைத்தனர்.

  அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  அவர்களுக்கு ஆன்லைனின் முலம்  காத்தாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஷேக் (வ/32 ) என்பவரை கொரட்டூர் பகுதிக்கு வாடிக்கையாளர் போல் வரவழைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

  Read More:  குளத்தில் கலக்கும் மனிதக் கழிவுகள்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி

  மேலும் அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட காத்தாடி 5க்கும் மேற்பட்ட லொட்டாயி உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களை பறிமுதல் செய்ததோடு எச்சரித்து அனுப்பினர்.

  அம்பத்தூர் செய்தியாளர் கன்னியப்பன்

  Published by:Arun
  First published:

  Tags: Ambattur Constituency, Chennai Police