Home /News /tamil-nadu /

வழிப்பறி செய்து உல்லாசம்... போட்டுக்கொடுத்த நண்பர்... மாவுக்கட்டுக்கு பயந்து சரணடைந்த கொள்ளையர்கள்!

வழிப்பறி செய்து உல்லாசம்... போட்டுக்கொடுத்த நண்பர்... மாவுக்கட்டுக்கு பயந்து சரணடைந்த கொள்ளையர்கள்!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

  • News18
  • Last Updated :
    வேலூரில் வழிப்பறி செய்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள், நண்பர்களை கூட்டு சேர்க்க அழைத்ததால் சிக்கி உள்ளனர். மாவுகட்டுக்கு பயந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் வழக்கறிஞர் மூலமாக போலீசில் சரணடைந்துள்ளனர்.

    ஆரணி களம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அரிசி மொத்த வியாபாரம் செய்துவரும் 50 வயதான கோதண்டராமன். வேலூரில் சில்லறை விற்பனை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை சப்ளை செய்து வருகிறார்.

    கடந்த 4-ம் தேதி இரவு வேலூர் வேலப்பாடி அருகே நான்குபேர் கொண்ட கும்பல் கோதண்டராமனை மடக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றது. இதுகுறித்து கோதண்டராமன் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வேலப்பாடி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அசோக்குமார் , வினோத், கார்த்தி, ஸ்பைக் ஆனந்தன் ஆகியோர் சேகரின் நண்பர்கள். இவர்கள் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக சேகரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். நண்பர்களுக்காக அவரும் திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். அதன்படி, மாதத்திற்கு ஒருமுறை கோதண்டராமன், அரிசி கடைகளில் பணத்தை வசூல் செய்ய வருவார் என்றும், அப்படி வசூல் செய்த பணத்தை தனியாகத்தான் எடுத்து செல்வார் என்றும் நண்பர்களிடம் சேகர் கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் கடந்த 4-ம் தேதி பணத்தை வசூல் செய்து கொண்டு தனியாகச் சென்ற கோதண்டராமனிடம் வழிப்பறியை அரங்கேற்றியுள்ளனர் சேகரின் நண்பர்கள் .

    அதன் பின்னர், வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, ஊர் ஊராக சுற்றி கடைசியாக ராமேஸ்வரத்தில் சேகர் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரும் அறை எடுத்து தங்கி மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    அப்போது போதை தலைக்கேறி வேலூர் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் சேகர் போனில் பேசியுள்ளார். தாங்கள் ராமேஸ்வரத்தில் உல்லாசமாக இருப்பதாகவும், நீயும் வந்தால், ஜாலியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதை கேட்ட நண்பர் ராமேஸ்வரம் செல்லாமல் நேராக வேலூர் போலீசாரிடம் சென்று தகவல் சொல்லியுள்ளார்.

    இதை அடுத்து தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க ராமேஸ்வரம் விரைந்தனர். அதற்குள் அவர்கள் கையில் இருந்த பணம் காலியானதால், 5 பேரும் வேலூர் திரும்பினர். ஓல்டுடவுன் மலையடிவாரப் பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் உள்ளே பதுங்கி இருந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் வாட்டர் டேங்கில் மது அருந்திக்கொண்டிருந்த சேகர், அசோக்குமார், வினோத் ஆகிய மூவரை பிடித்தனர்.

    தலைமறைவாக இருந்த கார்த்தி மற்றும் ஸ்பைக் ஆனந்தன், மாவுக்கட்டுக்கு பயந்து வழக்கறிஞர் மூலம் போலீசில் சரணடைந்தனர்.

    Published by:Sankar
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Vellore

    அடுத்த செய்தி