• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கைதியிடம் செல்போன்களைத் திருடச் சொல்லி விற்று வந்த சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது - சென்னையில் பரபரப்பு

கைதியிடம் செல்போன்களைத் திருடச் சொல்லி விற்று வந்த சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது - சென்னையில் பரபரப்பு

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

சென்னையில் கைதியை செல்போன் திருடவைத்து விற்பனையில் ஈடுபட்ட சிறைக் காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
சென்னை அமைந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த சிபி என்ற குற்றவாளியை அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருடனான சிபி-யிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைதாகி சிறைக்குச் சென்றபோது ஜெயில் வார்டனாக பணிபுரிந்து வரும் சிறைக் காவலர் ரமேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் ரமேஷ், சிபி-யிடம் செல்போன்களைத் திருடி தன்னிடம் கொடுக்குமாறும், அப்படி கொடுத்தல் அதனை தனக்கு தெரிந்த நபர்களிடம் விற்று வரும் பணத்தில் ஆளுக்கு பாதி பாதி எனக்கூறியுள்ளார். மேலும் இந்த டீலிங்குக்கு உடன்பட்டால் ஜெயிலில் சகல வசதிகளையும் செய்துகொடுப்பதாக உறுதியளித்து, அதன்படியே மது உட்பட பல வசதிகளை குற்றவாளியான சிபிக்கு சிறைக்காவலர் ரமேஷ் செய்து கொடுத்து வந்துள்ளார்.

சிறையில் சிறைக்காவலரால் சொகுசாக இருந்த சிபி இரண்டு மாதங்களுக்கு முன் வெளியே வந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட செல்போன்களை சிறைக் காவலரான ரமேஷிடம் கொடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும், சிறைக் காவலர் ரமேஷ் பர்மா பஜாரில் திருட்டு செல்போன்களை வாங்கும் கார்த்திக் என்பவனிடம் அதனை விற்று 70 சதவிகித பணத்தை தான் எடுத்துக்கொண்டு, மீதி பணத்தை செல்போன் திருடனான சிபி-யிடம் கொடுத்து வந்தார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

அதனடிப்படையில் செல்போன் திருடன் சிபி-யுடன் சிறைக் காவலர் ரமேஷ் மற்றும் பர்மா பஜாரில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் அமைந்தகரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சிறைக்காவலர் செல்போன் திருடி ஜெயிலுக்கு வரும் செல்போன் திருடர்களிடம் இதேபோல் டீல் பேசி அவர்களிடமிருந்து திருட்டு செல்போன்களை பெற்று வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைக் காவலர் ரமேஷ் எத்தனை குற்றவாளிகளிடம் இதேபோன்று டீல் பேசி மொபைல் போன் டீலிங் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறித்து அமைந்தகரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறைக்கு வரும் குற்றவாளிகளிடம் சிறைக்காவலர் செல்போனை திருட செய்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது காவல் துறை மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: