POLICE ARRESTED CHEATED PERSON WHO ANNOUNCED IF YOU PAY 30000 YOU WILL GET ONLINE JOB IN KORATTUR CRIME VAI
'30000 பணம் செலுத்தினால் வருமானம்..' - ஆன்லைனில் வேலை என ஆசைகாட்டி மோசடி செய்தவருக்கு போலீஸ் வலைவீச்சு..
கோப்புப் படம்
சென்னை கொரட்டூரில் 30,000 ரூபாய் செலுத்தினால், நாள்தோறும் 1400 ரூபாய் வருமானம் கிடைக்கும் எனக் கூறி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கொரட்டூரை சேர்ந்த லட்சமி என்பவர், ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை தேடி வந்தார். இதனையடுத்து அவரது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், தான் யூடியூப் சேனல் லிங்க் அப்ளிகேஷன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களது நிறுவனத்தில் பணிபுரிய 30000 ரூபாய் முன்பணம் செலுத்தினால், தினந்தோறும் 1400 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறி உள்ளார். யூடியூப்பில் வரும் வீடியோக்களை ஸ்க்ரின் ஷார்ட்டு எடுத்து தங்களது நிறுவன தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புவது மட்டுமே வேலை என அவர் கூறி உள்ளார்.
இதனை நம்பிய லட்சுமி, 30000 ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். கூறியபடி அவரது வங்கி கணக்கில் தினந்தோறும் 1400 ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக தனது நண்பர்களிடம் லட்சுமி கூறி உள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் சிலர் மூன்றரை லட்சம் செலுத்தி அந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
எனினும் திடீரென வங்கி கணக்கில் பணம் வருவது நின்றதால் அவர்கள் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றனர். இருப்பினும் அந்த எண் துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மோசடி கும்பலை தேடி வருகின்றனர். இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.