வேலை செய்த வீட்டில் நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் கைது!

திருடிய நகையில் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்தது விசாரணையில் அம்பலம்.

வேலை செய்த வீட்டில் நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் கைது!
ஷலினி மற்றும் லோகநாயகி
  • News18
  • Last Updated: February 14, 2020, 1:02 PM IST
  • Share this:
சென்னை எழும்பூரில் வேலை செய்த வீட்டில் கிலோ கணக்கில் நகையை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5-ம் தேதி சென்னை எழும்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் கல்யாண் குமார் என்பவர் வீட்டில் நகை திருடு போனதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை செய்ததில் வீட்டில் வேலை பார்த்த லோகநாயகி மற்றும் ஷாலினி என்ற வீட்டு வேலை செய்யும் பெண்கள் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது.


விசாரணையில் நீண்ட ஆண்டுகாலமாக வேலை செய்யும் பெண்கள் திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது. கல்யாண்குமார் வெளிநாட்டில் தொழில் செய்து வந்து கொண்டிருக்கும் போது, தனது பெற்றோர்களை கவனிப்பதற்காக லோகநாயகி மற்றும் ஷாலினி என்ற இரண்டு வேலை செய்யும் பெண்களை வேலைக்கு வைத்துள்ளார்.

வீட்டில் நகை பணம் ஆகியவற்றை சோதனை செய்து பார்க்கும் பொழுது நிறைய காணாமல் போனது தொழிலதிபர் கல்யாண்குமார்க்கு தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வீட்டில் வேலை பார்த்த பெண்கள் திருடி இருப்பார்கள் என போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கல்யாண்குமார் வீட்டில் வேலை பார்த்த ஷாலினி என்ற வேலைக்காரி மட்டும் திடீரென வேலையை விட்டு நின்றது போலீசாருக்குத் தெரிந்தது. போலீசார் கைரேகைகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போது, அதே வீட்டில் நீண்ட ஆண்டுகாலமாக வேலைபார்த்த லோகநாயகி என்பவர், தன்னுடன் வேலை பார்க்கும் சுபா என்ற பெண்ணின் செல்போனை பயன்படுத்தி  ஷாலினிக்கு தகவல் கொடுத்துள்ளார்.சுபா தன் செல் போனில் கால் ரெக்கார்டர் மூலம் பதிவாகியிருந்த அழைப்புகளின் ஆடியோவை கேட்கும்போது, லோகநாயகி மற்றும் ஷாலினி நீண்ட ஆண்டுகாலமாக கள்ளச்சாவி போட்டு நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சுபா தொழிலதிபர் கல்யாண்குமார் இடம் தெரிவித்ததையடுத்து, லோகநாயகி,ஷாலினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் என நான்கு பேரை போலிசார் கைது செய்தனர். முதற்கட்டமாக 75 பவுன் நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இரண்டு பேரும் கிலோ கணக்கில் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கில் பணத்தை திருடியதும், அதை வைத்து லோகநாயகி மற்றும் ஷாலினி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது.

லோகநாயகி தனது மகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரம் திருமணம் செய்ததும் சொந்தமாக கார் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இருவரிடமிருந்து 1.75 கிலோ தங்கம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும், காரையும் எழும்பூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்