மாதவரத்தில் மாவா போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது!

கைதான ரோகித், வாரம் ஒருமுறை உத்தரபிரதேசத்திற்கு சென்று மாவா தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

மாதவரத்தில் மாவா போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 19, 2019, 1:25 PM IST
  • Share this:
சென்னையை அடுத்த மாதவரத்தில் மாவா போதைப்பொருளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் மாதவரத்தில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித்தை கைது செய்தனர்.

விசாரணையில் கைதான ரோகித், வாரம் ஒருமுறை உத்தரபிரதேசத்திற்கு சென்று மாவா தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.


அவர்களிடம் இருந்து 30,000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also see...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...