தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி(29). மெக்கானிக்கல் பட்டதாரியான இவர் தற்போது பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக இவர்
சென்னையில் பணியாற்றிய போது இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் இந்த காதலை ஏற்க மறுத்துள்ளனர். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் கடந்த மே மாதம் அருண் ஜோஷி மீண்டும் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருப்பதை அறிந்த அவரது காதல் மனைவி மேற்கொண்டு கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடி அப்பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை தனது கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி செய்வதறியாது திகைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் தனது காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க திட்டமிட்ட காதல் மனைவி, போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி பஹ்ரைனில் பணியாற்றி வரும் தனது காதல் கணவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பி உள்ளார்.
Also Read : வீடியோ கான்பிரன்சிங் விசாரணையில் சென்னை வக்கில் செக்ஸ் சேட்டை
காதல் கணவரான அருண் ஜோஷி வேறு ஒரு பெண் என நினைத்து தனது காதல் மனைவியின் நட்பு கோரிக்கையை ஏற்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களிலேயே இளம்பெண்ணிடம் அருண் ஜோஷி ஆபாசமாக பேசி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் உன்னை போன்ற பெண்களுக்கு தமிழக தொழிலதிபர்களிடம் நிறைய கிராக்கி உள்ளது எனக்கூறியும், மேலும் தான் சொல்வதற்கு சம்மதித்தால் சில மாதங்களில் நீ பணக்காரியாக மாறிவிடலாம் என கூறியும் சாட் செய்து சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற காதல் மனைவி, தன்னை காதலித்து ஏமாற்றிய காதல் கணவரான அருண் ஜோஷி குறித்து அவரது பெற்றோரிடம் கூற அவர்கள் இளம்பெண்ணை இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் உனது வாழ்க்கை நாசமாகி விடும் என கூறி மிரட்டி உள்ளனர். இதனால் இளம்பெண் தஞ்சையில் இருந்து சென்னை வந்துள்ளார். மேலும் தனது கணவரை தானே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த அப்பெண் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
அதன்படி காதல் கணவரான அருண்ஜோஷிக்கு தான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள் எனவும் தங்களை நான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி உள்ளார். இந்த நிலையில் பஹ்ரைனில் இருக்கும் அவரது காதல் கணவரான அருண் ஜோஷிக்கு விமான டிக்கெட் புக் செய்து அவரை சென்னை வரவழைத்து திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
Also Read : அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்
தனக்கு ஒரு புது காதலி கிடைத்த சந்தோஷத்தில் அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் தனது மனைவியை இப்படி ஒரு நாடகம் நடத்தி தன்னை சென்னை வரவழைத்து இருப்பதும் மேலும் தனது ரகசியங்களை காவல்துறையினரிடம் கூறி கைது செய்ய வைத்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும், காதல் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் சொகுசு விடுதிலேயே வைத்து காதல் அருண் ஜோஷியை கோபம் தீரும்வரை அடித்து உதைத்து இருக்கிறார்.
அருண் ஜோஷியை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல்களில் பஹ்ரைனில் இருந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல பெண்களிடம் பேசிய ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.