உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது

விவசாயிகள் அனைவரையும் போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். அப்போது குழந்தையுடன் விளைநிலத்தில் அமர்ந்திருந்த பெண்ணை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர்.

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் போலீசார்
  • News18
  • Last Updated: August 22, 2019, 6:51 PM IST
  • Share this:
திருப்பூர் மாவட்டம் சாலையூர், காளியப்பன் கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில், விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான அளவீடு பணியை மேற்கொள்ள சாலையூர், காளியப்பன் கவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பவர் கிரிட் நிறுவன அதிகாரிகளும், வருவாய்துறையினரும் சென்றனர்.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளும், பெண்களும் விளைநிலத்தில் அமர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


இதனை அடுத்து விவசாயிகள் அனைவரையும் போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். அப்போது குழந்தையுடன் விளைநிலத்தில் அமர்ந்திருந்த பெண்ணை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர்.

கதறிய குழந்தையுடன் தாய் கைது செய்யப்பட்டது காண்போரை கலங்க செய்தது. அனைவரையும் கைது செய்த பிறகு பவர்கிரீட் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர்.

இந்நிலையில் நிகழ்விடத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்