• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பத்திரிகையாளர் போர்வையில் சுற்றித்திரிந்த கொலையாளி கைது!

பத்திரிகையாளர் போர்வையில் சுற்றித்திரிந்த கொலையாளி கைது!

ராஜேஷ்

ராஜேஷ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகம், கேரளாவில் கொலை - கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் போலீசார் கைது செய்தனர்

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையம் எதிரே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக "பிரஸ்" என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார், வாகனத்தில் வந்த இளைஞரிடம் எந்த பத்திரிகையில் பணியாற்றுகிறீர்கள் என விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் எந்த பத்திரிகையிலும் வேலை செய்யாமல், வாகனத்தில் போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுதந்திரமாக வலம் வந்தது தெரியவந்தது. அதுதவிர மேலும் சில திடுக்கிடும் தகவல்களும் விசாரணை மூலம் அம்பலமாகின.

    குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இந்த இளைஞர், அதே பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார். லில்லிபாய் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அந்த பெண்ணை கொலை செய்திருக்கிறார்.

    இந்த வழக்கில் சிறை சென்று வெளியே வந்ததும், கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடைகளில் விலையுயர்ந்த கேமிராக்களையும், புல்லட் வாகனங்களையும் திருடி, தக்கலை பகுதியில் விற்பனை செய்துள்ளார்.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள புல்லட் வாகனமும் கேரளாவின் கொல்லம் பகுதியில் திருடியிருப்பது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க, புல்லட் பதிவு எண்ணை மாற்றி பிரஸ் ஸ்டிக்கருடன் வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளில் கேரளா போலீசார் அவரை தேடி வரும் நிலையில், அம்மாநில போலீசார் அளித்த சிசிடிவி காட்சிகளோடு ஒப்பிட்டு பார்த்தபோது, அது ராஜேஷ்தான் என்பதை உறுதி செய்தனர்.

    இந்த தகவல் கேரளா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தக்கலை வந்த அவர்களிடம் ராஜேஷை தமிழக போலீசார் ஒப்படைத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: