Home /News /tamil-nadu /

விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த சைக்கிள் திருடன் கைது

விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த சைக்கிள் திருடன் கைது

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உல்லாசமாக வாழ்ந்து வந்த சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தனதுவீட்டு வளாகத்தின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த 20 ஆயிரம் மதிப்புடைய  சைக்கிள் காணாமல் போய்விட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்கள் திருடப்படுவது தொடர் வாடிக்கையாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பயன்படுத்தும் உயர்ரக சைக்கிள்கள் மட்டுமே தொடர்ந்து திருடு போன நிலையில் இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் ஈடுப்பட்டது ஒரே நபர் தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (எ) பாபு என்பது தெரியவந்தது.

இந்நிலையில் மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைக்கு திருட்டு சைக்கிளுக்கு காற்று அடிக்க வெங்கடேஷ் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைக்க போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடம்பத்தூரில் வசித்து வரும் வெங்கடேஷ்,  நாள்தோறும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ சென்னை பகுதிகளுக்கு வந்து பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள சைக்கிளை மட்டுமே குறிவைத்து இரவு நேரங்களில் திருடியது தெரியவந்தது.

மேலும், இருசக்கர வாகனங்களை  திருடினால் போலீசார் சிசிடிவி காட்சிகளில் பதிவான நம்பர் பிளேட்டை வைத்து எளிதாக நெருங்க வாய்ப்புள்ளதாகவும், திருடினாலும் ஆர்சி புக், உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாக விற்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும் என்பதால் சைக்கிளை மட்டுமே குறுவைத்து திருடுவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த சைக்கிள் பூட்டு போடாமல் நிறுத்தி இருக்கும் என்பதால் அதை நோட்டமிட்டு திருடிவிட்டு, திருடிய சைக்கிள் ரிப்பர் எனக்கூறி ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Also read... இந்தியன்-2 படத்தை வரவேற்கும் விதமாக எதுகை மோனை வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

திருடிய சைக்கிள்களை, 2000 முதல் 3000 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட சைக்கிளை வெங்கடேஷ் திருடியிருப்பது தெரியவந்தது.
மேலும், இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கேகே நகர் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி