ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது!

கொள்ளையனைப் பிடிக்க முயன்ற போது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கியதில் ஊர்க்காவல்படை வீரர் தலையில் காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து கொள்ளையனை போலீசார் போராடிப் பிடித்தனர். 

news18
Updated: February 12, 2019, 12:55 PM IST
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது!
கோப்புப் படம்
news18
Updated: February 12, 2019, 12:55 PM IST
பெரம்பலூரில் .டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூரின் முக்கிய பகுதியான வெங்கடேசபுரத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தனியார் வங்கி ஏ.டி.எம் உள்ளது.  இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சட்டையால் தன் முகத்தை மூடிய படி ஓர் இளைஞர் ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்ததை இருவர் பார்த்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவல் படி, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி, ஊர்க்காவல் படை வீரர் கண்ணன் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றனர்.  அப்போது அந்த இளைஞர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்று கொண்டிருந்தது தெரிய வந்தது

இருவரும் கொள்ளையனைப் பிடிக்க முயன்ற போது கொள்ளையன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கியதில் கண்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து கொள்ளையனை போலீசார் போராடிப் பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் நாமக்கல் எடையப்பட்டியை சேர்ந்த தனுஷ் என்பதும் அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் காவாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

Also see...

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...