Home /News /tamil-nadu /

காவல்துறையின் நடவடிக்கையால் கர்ப்பிணி காதலியைக் கரம்பிடித்த காதலன்!

காவல்துறையின் நடவடிக்கையால் கர்ப்பிணி காதலியைக் கரம்பிடித்த காதலன்!

திருமணம் செய்து வைத்த போலீஸ்

திருமணம் செய்து வைத்த போலீஸ்

போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் புனிதாவை காதலித்து கர்ப்பமாக்கியது உண்மை என்று ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவறை உணர்ந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்து திருமணம் செய்து வைத்தனர்.

புதுக்கோட்டை  மாவட்டம் வடகாடு சேர்வைகரன்பட்டியைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் அதே கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி  பகுதியைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் வரம்பு மீறி பழகியதில் புனிதா நான்கு மாத கர்ப்பிணியானார்.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புனிதா பிரபுவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் இவர்களின் காதலுக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே  கடந்த மாதம் பிரபு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு மாத காலமாக தேடி நேற்று இளைஞர் பிரபுவை கைது செய்தனர்.

போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் புனிதாவை காதலித்து கர்ப்பமாக்கியது உண்மை என்று ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவறை உணர்ந்து அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அக்கிராமத்தினர் முன்னிலையில் வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து அறிவுரைகளை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

காதலித்த பெண் கர்ப்பம் ஆனதும் தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தபின் தவறை உணர்ந்த காதலன் மீண்டும் கர்ப்பிணி காதலியை காவல் நிலையத்திலேயே கரம் பிடித்த சம்பவம் வடகாடு காவல் நிலையத்தில் அரங்கேறி உள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி