Home /News /tamil-nadu /

45 சவரன், கார் கொடுத்தும் வரதட்சணை போதவில்லை... திருமணமாகி 2 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கணவர், மாமியார் கைது

45 சவரன், கார் கொடுத்தும் வரதட்சணை போதவில்லை... திருமணமாகி 2 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கணவர், மாமியார் கைது

கணவர் சந்தோஷ்குமார் மற்றும் மாமியார் இந்திரா

கணவர் சந்தோஷ்குமார் மற்றும் மாமியார் இந்திரா

கடலூரில் திருமணம் ஆன 2 மாத்ததில் வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கண்வர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
  கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதான குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் சுசிதா கிருபாநிலானி (வயது 25). இவர் கடலூரில் கூட்டுறவு துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியில் உள்ளார். இவருக்கும் கடலூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28 ) வேலை இல்லாததால் வழக்கறிஞருடன் பயிற்சியாளராக உள்ள இவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணம் நடைபெற்றுள்ளது.

  திருமணத்தின்போது சந்தோஷ்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக 50 பவுன் தங்க நகை மற்றும் கார் வேண்டுமென கேட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பெண் வீட்டார் 45 பவுன் தங்க நகை மற்றும் ஹூண்டாய் கார் வாங்கி கொடுத்துள்ளனர்.

  திருமணம் ஆன நிலையில் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டை வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. சந்தோஷ் குமார் மற்றும் அவரது தாயார் இந்திரா இருவரும் சேர்ந்து பெண்ணிடம் 50 பவுன் நகை கேட்டும் ஆனால் உங்கள் வீட்டில் இருந்து 45 பவுன் மட்டுமே போட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பவுன் நகை எங்கே எனவும் அதுவும் வேண்டும் என நாள்தோறும் வரதட்சணை கேட்டு சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களாக மனவேதனையில் தவித்த சவிதா கிருபாநிலாபி தனது தாயாரிடமும் தந்தையிடமும் மீதமுள்ள நகையை கணவரும் மாமியாரும் தினமும் கேட்டு தொல்லை செய்வதாக கூறி வந்துள்ளனர்.

  Also read... சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு  இந்த நிலையில் சனிக்கிழமை சுசிதா கிருபாநிலானி தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை கடலூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை மாமியார் வீடான எம்.புதூர் கிராமத்திறக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் மாமியார் எங்கே சென்று ஊர் சுற்றிவிட்டு வருகிறாய் யாருடன் சென்றாய் என சந்தேகித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுசிதா கிருபாநிலாபி தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு என்னை சந்தேகப்பட்டு மாமியார் வீட்டில் பேசுகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என அழுது புலம்பியுள்ளார். அப்போது உறவினர்களுடன் வந்து பேசுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

  இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு கணவர் வீட்டில் சபிதா கிருபாநிலாபி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டார் என சந்தோஷ் குமார் வீட்டிலிருந்து கிருபாநிலாபி தந்தைக்கு தொலைபேசியில் தகவல் சென்றுள்ளது. மருமகன் வீட்டிற்கு வந்து பார்த்த தந்தை மற்றும் உறவினர்கள் மகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வரதட்சணையால் என் மகளை கொன்று விட்டீர்களே என கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு தன் மகளை கொன்றுவிட்டார்கள் என கூறி புகார் கொடுத்தார்.

  புகாரின்பேரில் திருப்பாதிரிப் காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஐந்து பவுன் நகைக்காக திருமணமான இரண்டு மாதங்களில் பெண்ணை நகைக்காக கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. நகையை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் சந்தோஷ்குமார் மற்றும் மாமியார் இந்திரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

  வேலை இல்லாத ஒருவருக்கு பெண்னை கொடுத்து 46 பவுன் நகை, கார் கொடுத்தும் வரதட்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள்

  அடுத்த செய்தி