எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார். கடந்தமுறை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரிலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார்.இவரை தமிழக அரசு, அரசியல் வட்டாரங்கள் மாரியப்பனை பாராட்டி வருகின்றனர்.
Also Read: ’ஒரு பெரிய சம்பவம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகனும்’- வங்கி கொள்ளையர்கள் வாக்குமூலம்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் மாரியப்பன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன்:- அனைவரும் விளையாட்டு வீரர்களை ஹீரோவாக எண்ணுகின்றனர் ஆனால் உண்மையான ஹீரோ காவல்துறையினர் தான் குடும்பங்களை மறந்து மக்களை காத்து வருகின்றனர்.
கஷ்டங்கள் வரும்போது சோர்வடைந்து போகாமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து நம்பிக்கையுடன் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டி,ஐ,ஜி ஸ்ரீராம் கலந்துகொண்டு மாரியம்மனை வாழ்த்தினார்.
செய்தியாளர்: சுரேஷ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mariyappan Thangavelu, News On Instagram, Police, Tokyo Paralympics