திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

news18
Updated: April 14, 2019, 3:46 PM IST
திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!
விஷவாயு
news18
Updated: April 14, 2019, 3:46 PM IST
திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம் பாளையத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான சாய ஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய வட மாநில தொழிலாலர்கள் 4 பேர் விஷவாயு தக்கி  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சாய ஆலை கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது முதலில் இறங்கிய ஒருவர் விஷ வாயு தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து மூன்று பேர் இறங்க, அவர்களும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 4 பேரும் அஸ்ஸாம் மாநிலத்தைத் சேர்ந்த தில்வார் ஹூசைன், ஃபரூக் அகமது, அன்வர் ஹூசைன், அபு என்று தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க:
First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...