• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தி மட்டும்தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? - வைரமுத்து ஆதங்கம்

இந்தி மட்டும்தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? - வைரமுத்து ஆதங்கம்

வைரமுத்து.

வைரமுத்து.

இந்தி மட்டும்தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா என மொழிப் பிரச்னை குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தி தெரியாவிட்டால் இந்தியரா என்ற கேள்வி திமுக எம்.பி கனிமொழியை நோக்கியது மட்டுமல்ல அது வடக்கின் விரல் தெற்கை நோக்கி நீண்டு கேட்கும் நீண்ட கேள்வி என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆதிக்கத்தின் அம்பறாத் தூணிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு என்றும் வைரமுத்து சாடியுள்ளார்.

    இந்தி மட்டும் தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா என்றும் இந்தியாவுக்கு வடக்கு மட்டும்தான் திசையாகுமா என்றும் வைரமுத்து சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    Also read: யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது? - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

    மேலும் கூறுகையில், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மொழிகளில் சரிபாதி காற்றில் கரைந்து விடும் என்ற ஐ.நா.வின் புள்ளிவிவரம் வயிற்றில் புளியைக் கரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்ட இனம், அடிமை இனம் ஆனதற்கு மூலமே மொழிதான் எனக் கூறியுள்ள வைரமுத்து, இந்தி மட்டுமே இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழ் பேரடையாளம் எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: