• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

கவிஞர் புலமைப்பித்தன்

கவிஞர் புலமைப்பித்தன்

தமிழ் சினிமாவில் கவிஞர் புலமைப்பித்தன் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

  • Share this:
    கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

    கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அவருக்கு வயது 85.  1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

    குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற தொடங்கிய புலமைப்பித்தன் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற வளைகாப்பு பாடலான தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் புலமைப்பித்தன் எழுதியது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: