வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய ரஜினிகாந்த் - போயஸ்கார்டனில் நெகிழ்ச்சி சம்பவம்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய ரஜினி

மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு பள்ளி மாணவர்களை படிக்க வைக்க முன் வருவதாகவும் ரஜினி கூறி உள்ளார்.

  • Share this:
தனது குழந்தையின் கல்விக்காக உதவிக் கேட்டு ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் நிதியதவி அளித்து ஆதரவுக்கரம் நீட்டிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் குறித்து ரஜனிகாந்த என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரது வீடு முன் அவரது ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கெளரி ராமையா என்ற பெண் தனது குழந்தையில் கல்வி செலவுக்கு உதவி கேட்டு காத்திருந்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் முதலில் எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறேன்.  எனது கடைசி மகன் 11வது வகுப்பு எனது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்  பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வகுப்புகளை வாட்ஸப் மூலம் படித்துக் கொள்ளுங்கள் என்று அரசு கூறிவிட்டது .

ஆனால் செல்போன் வாங்குவதற்கு கையில் பணம் இல்லை
நான் பயணிப்பதற்கு அரசு கொடுத்த மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் முற்றிலும் பழுதாகி விட்டதால் அதை பயன்படுத்தி எங்கும் காய்கறி வியாபாரம் செய்ய கூட நடந்து செல்ல முடியவில்லை.  என் கணவருக்கு ஆஸ்துமா நோய் காரணமாக அவரால் பணிக்கும் செல்ல முடியவில்லை. அவருக்கு மருந்தும் வாங்க முடியாத ஒரு அவல நிலையில் இருந்து வருகிறேன்.

இதனால் சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களிடம் உதவிகளைப் பெறலாம் என்பதற்காக வந்தேன். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடமும் உதவி கேட்கலாம் எனக்கு உதவி கிடைத்தால் மூன்று சக்கரம் வாகனத்தை பயன்படுத்தி ஏதாவது வேலை செய்துக்கொள்வேன்“ என்றார்.

இதையறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது உதவியாளர் மூலம் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு பள்ளி மாணவர்களை படிக்க வைக்க முன் வருவதாகவும் தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: