ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கவிதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கவிதை

ஜெயலலிதா

ஜெயலலிதா

வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி!வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் 73 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. அன்றைய தினம், அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னார் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த தொடர்களுக்கு உணவு வழங்கினர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா அவர்களை பற்றி கவிதை ஒன்றை வாசித்தார். அந்த கவிதையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்காக ஜெயக்குமார் எழுதியதாக கூறினார்.

பலரின் பாராப்டைப் பெற்ற அந்த கவிதை:

எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை, விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை…

எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்…

வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி!வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்…

‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்…’ வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை! “இதய தெய்வம்”உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று! எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம்.

கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். ஆதலால் தான் அனைவருக்கும் என்றென்றும் நீங்களே இதய தெய்வம்! மகமே! எங்கள் ஜெகமே!! உங்களை நினைக்காத நாளில்லை…  மறந்தால் நாங்கள்நாங்களில்லை… நீங்கள் ஆள வேண்டுமென சொன்னதைக் காட்டிலும் இன்னமும் நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்க வேண்டும் அம்மா!

ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக அமையும்,  உங்கள் பிறந்தநாள் இந்த தேசத்திற்கே சிறந்த நாள்!

‘அம்மா!’

இந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்த பின்னும் ஒலிக்கும் வார்த்தை அம்மா! அம்மா!! அம்மா!!!உங்கள் பாதையில் எங்கள் பயணம் என்னாளும் தொடர ஆசீர்வதியுங்கள் அம்மா!!

இப்படிக்கு, அம்மாவின் உண்மை விசுவாசி டி.ஜெயக்குமார்.

இவ்வாறு எழுதினார். இதனை கேட்ட அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா பற்றி அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கவிதைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கவிதையை பலரும் பராட்டி வருகின்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: Jayalalithaa, Minister Jayakumar