Home /News /tamil-nadu /

2018ல் கெட்டவன், 2022ல் நல்லவன்.. கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் மீது பாய்ந்தது போக்சோ!

2018ல் கெட்டவன், 2022ல் நல்லவன்.. கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் மீது பாய்ந்தது போக்சோ!

2018ல் கெட்டவன், 2022ல் நல்லவன்.. கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் மீது பாய்ந்தது போக்சோ!

2018ல் கெட்டவன், 2022ல் நல்லவன்.. கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் மீது பாய்ந்தது போக்சோ!

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி(36). இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி படிக்கும் மகள் மற்றும் மகனுடன் அபிராமி தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் (39) என்பவருக்கும் அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் திடீரென அபிராமிக்கும் அவரது கள்ளக்காதலன் ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தனது மகளிடம் தனது கள்ளக் காதலனான ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இதனையடுத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஓராண்டுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் அபிராமிக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிராமியின் பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கு கடந்த மார்ச் மாதம் 7ம்தேதி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Also Read : அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது - அமைச்சர் அறிவிப்பு

அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதற்காக அவர் மீது பொய்யான போக்சோ புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் அபிராமி கூறியுள்ளார். இதனையடுத்து பொய்யாக போக்சோ புகார் கொடுத்ததற்காக அபிராமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அபிராமி மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் தனக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான போக்சோ புகார் கொடுத்ததாகவும், தற்போது தானும் அவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதால் உண்மையை நீதிமன்றத்தில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அபிராமியை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Pocso, POCSO case

அடுத்த செய்தி