போக்சோ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை... போலீசார் விளக்கம்

2019-ம் ஆண்டு மே மாதம் வரை, போக்சோ வழக்குகளில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு கூட இந்தாண்டு தண்டனை வழங்கப்படவில்லை.

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:11 PM IST
போக்சோ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை... போலீசார் விளக்கம்
போக்சோ வழக்கு
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:11 PM IST
தமிழகத்தில் இந்தாண்டு போக்சோ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் போக்சோ சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்குகளில், 2902 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 689 பேர் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர்.

அதேபோல், நீதிமன்றங்களில் மொத்தம் 3911 வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன. மேலும், போலீஸ் விசாரணையில் 1054 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.


இதன்படி, ஆண்டுக்கு ஆண்டு போக்சோ சட்டத்தில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.

இதில், அதிகபட்சமாக, 2015-ம் ஆண்டு, 813 பேர் விடுவிக்கப்பட்டனர், அதே ஆண்டில் தான் அதிகபட்சமாக 190 பேர் தண்டனை பெற்றிருக்கின்றனர்.

2016-ல் 606 பேர் விடுவிக்கப்பட்டனர், 131 பேர் மட்டுமே தண்டனை பெற்றனர்.

Loading...

2017-ல் 346 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், வெறும் 56 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2018-ம் ஆண்டு 171 பேர் விடுதலை அடைந்தனர், 29 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.

2019-ம் ஆண்டு மே மாதம் வரை, போக்சோ வழக்குகளில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு கூட இந்தாண்டு தண்டனை வழங்கப்படவில்லை.கடந்த 7 ஆண்டுகளில் 2019-ல் தான், அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு மே மாதம் வரை 655 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

அதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு ஒத்துழைப்பு அளிக்காததால், விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்படுபவர்களில் பெரும்பாலானோர் உறவினர்களாக இருப்பதால், அவர்களுக்குள்ளேயே சமரசம் செய்துகொள்வதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு இயற்றப்பட்ட போக்சோ சட்டம், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

Also watch:
First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...