மின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிகழ்விற்கு வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு!

தென்மாநிலங்களில், அதாவது தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் மட்டுமே குறைந்துள்ளது.

மின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிகழ்விற்கு வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு!
தென்மாநிலங்களில், அதாவது தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் மட்டுமே குறைந்துள்ளது.
  • Share this:
பிரதமரின் வேண்டுகோளை தொடர்ந்து நேற்றிரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிகழ்விற்கு வடமாநிலங்களில்தான் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேநேரம் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வரவேற்பு குறைந்துள்ளது குறைவான மின்பயன்பாடு மூலம் தெரியவந்துள்ளது. தேசிய மின்பளு விநிநோக மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் நேற்று இரவு 8.45 மணிக்கு 1,16,887 மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வானது படிப்படியாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இரவு 9 மணிக்கு 15,000 மெகாவாட்டும், 9.10 மணிக்கு 31,089 மெகாவாட்டும் மின் பயன்பாடு குறைந்துள்ளது.


இரவு 9.20 க்கு 21,092 மெகாவாட்டுவும், அதற்கு அடுத்த 10 நிமிடங்களில் 8,080 மெகாவாட்டும் மின் நுகர்வு குறைந்துள்ளது.

இந்த நிகழ்வின்போது தென்மாநிலங்களில், அதாவது தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் மட்டுமே குறைந்துள்ளது.

அதேநேரம் வடக்கு மண்டலத்தில் 10,413 மெகாவாட், மேற்கு மண்டலத்தில் 8,464 மெகாவாட், கிழக்கு மண்டலத்தில் 6,136 மெகாவாட் அளவுக்கு மின் பயன்பாடு குறைந்திருந்தது.இந்த நிகழ்வின்போது மின் உற்பத்தி மற்றும் விநியோக தொடரமைப்பு பாதிப்படையக் கூடாது என்பதற்காக நேற்றிரவு 8.45 மணியில் இருந்து 9.10 மணி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மின் உற்பத்தி கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, புனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தியானது 25,559 மெகாவாட்டில் இருந்து 8,016 மெகாவாட்டாகக் குறைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று அனல்மின் உற்பத்தி நிலையத்தில் 6,992 மெகாவாட்டும், எரிவாயு மின் உற்பத்தி 1,915 மெகாவாட்டும், காற்றாலை மின்சார உற்பத்தியில் 2000 மெகாவாட் வரையும் மின் உற்பத்தி குறைக்கப்பட்டிருந்தது.

Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading