• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆர்எஸ்எஸ் போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்- ராமதாஸ்

ஆர்எஸ்எஸ் போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்- ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.

  • Share this:
    ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சிறப்பு பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் , ‘ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும், அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததே என்றும் குறிப்பிட்டார்.

    தனியாக தேர்தலில் நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? என்று பொதுக்குழுவில் கலந்து கொண்டவரிகளிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: