அறிவில்லாதவர்கள், முண்டங்கள் தான் இது போன்று பேசுவார்கள்- ராமதாஸ் ஆவேசம்

இப்போதெல்லாம் ஸ்டாலின் பேசுவதை விட மனதில் தோன்றுவதையெல்லாம் உளறி வருகிறார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Web Desk
Updated: April 14, 2019, 11:10 AM IST
அறிவில்லாதவர்கள், முண்டங்கள் தான் இது போன்று பேசுவார்கள்- ராமதாஸ் ஆவேசம்
பாமக நிறுவனர் ராமதாஸ்
Web Desk
Updated: April 14, 2019, 11:10 AM IST
பணம் பெற்று எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு நடத்தியதாக கூறுபவர்கள், அறிவில்லாதவர்கள், முண்டங்கள் என்று  ராமதாஸ் கடுமையாக சாடினார்.

சேலத்தில் , அம்பேத்கரின் 128 வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய மக்கள் அனைவரும் அம்பேத்கர் காட்டிய சமூக ஒற்றுமை மற்றும் நல்லுறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

ஒரு சதவிகித பாமக வாக்கு வங்கியை பெற்று மாபெரும் வெற்றி பெறுவோம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், இப்போதெல்லாம் ஸ்டாலின் பேசுவதை விட மனதில் தோன்றுவதையெல்லாம் உளறி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், 8 வழி சாலை வழக்கு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் தலா 2,000 ரூபாய் வரை பணம் பெற்று வழக்கு நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அறிவில்லாதவர்கள், முண்டங்கள் தான் இது போன்று சொல்லுவார்கள் என காட்டமாக தெரிவித்து பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...