கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் கரும்புகளுக்காக 5 அடிக்கும் குறைவான கரும்புகளையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு முதலில் சேர்க்கப்படவில்லை. அதற்கு பிறகு பல தரப்பிகளில் இருந்து எழுந்த கோரிக்கைகளுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் அறிவித்தார். இந்த தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு 6 அடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு கூறி இருந்தது. இந்த நெறிமுறையை மாற்றியமைக்க தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:- “தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது!
6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்! 6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது!
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது!(1/4)
— Dr S RAMADOSS (@drramadoss) January 7, 2023
கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்!” என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr Ramadoss, Pongal, Pongal 2023, Pongal Gift