ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப்பணிகளில் சமூக நீதி கொள்கை.. வரவேற்பு தெரிவித்த ராமதாஸ்!

அரசுப்பணிகளில் சமூக நீதி கொள்கை.. வரவேற்பு தெரிவித்த ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை பின்பற்றப்படுவதற்கான சட்டவல்லுனர் குழு அமைத்து தமிழக அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தலைமையில் என்.ஆர்.இளங்கோ, அருண் மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதில் சட்டவல்லுனர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்ற தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  Also see... தங்கம் விலை குறைந்தது... சவரன் எவ்வளவுக்கு விற்பனை?

  இந்நிலையில் தமிழக அரசின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “ தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று ட்வீட் செய்துள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dr Ramadoss