பாமக நிறுவனர் ராமதாஸ் பேரனுக்கும், ஏ.கே. மூர்த்தி மகளுக்கும் திருமணம்

பாம நிறுவனர் ராமதாஸ் பேரனுக்கும், ஏ.கே. மூர்த்தி மகளுக்கும் திருமணம்

பாமக நிறுவனர் ராமதாஸ் பேரன் திருமணத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

  • Share this:
    பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மகள்வழி பேரன் நிதர்ஷனுக்கும், பாமக வடக்கு மண்டல இணை செயலாளர் ஏ.கே.மூர்த்தி மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - திருமதி சரஸ்வதி அம்மையார்  அவர்களின் இளைய மகள்  கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன்  மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    Also Read : பெண்களை இழிவுபடுத்திய திண்டுக்கல் லியோனிக்கு பாடநூல் நிறுவனத் தலைவர் பதவியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, தேசிய தேர்வுகள் வாரியத்தின் முன்னாள் தலைவர்  பத்மஸ்ரீ மருத்துவர் அ.இராஜசேகரன் - திருமதி தில்லைநாயகி இணையர்,  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும்,  முன்னாள்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  திருமதி சவுமியா அன்புமணி, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.  மேலும் மாலையில் மணமக்கள் வரவேற்பு நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: